About

Who we are

Dr.M.ராஜேந்திரன் IAS

Dr.M.ராஜேந்திரன் M.A..,B.L.,H.D.C.,LL.M.,Ph.D,மாநில தேர்தல் ஆணையர் [கூட்டுறவு சங்கம் ]-தமிழ்நாடு) அவர்களஅவர்கள் 1959 ம் வருடம் மதுரை மாவட்டம் வடகரை யில் பிறந்தார் .தனது M .A கல்லூரி படிப்பை மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ,B .L படிப்பை மதுரை சட்ட கல்லூரி யிலும் ,P h .D தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ,L L .M அண்ணா பல்கலைக்கழகத்லும் பயின்றார் . இவர் வகிக்கும் பதவிகள் தமிழ்நாடு மற்றும் தேசிய தலைவர் ,இந்திய சிலம்பாட்டம் அமைப்பு மற்றும் தலைவர் ,ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு சங்கங்கள் ,தமிழ்நாடு .இவர் தற்போது வகிக்கும் மற்றும் முந்தைய பணிகள் இன்னும் ஏராளமானவை .திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவராக பணி புரிந்துள்ளார் .பல நூல்கள் எழுதியுள்ளார் மற்றும் இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை எனும் ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .எழுதிய நுல்களுக்க பெற்ற பாராட்டுகளும் ஏராளமானவை .தமிழகத்தின் அதிக உணவு உற்பத்தி செய்த சாதனைக்காக பிரதமர் மோடி யிடம் கிரிஷி கரிஷ்மான் விருது 2015 ம் ஆண்டு பெற்றார்
view more
Videos-1     Videos-2     Videos-3S ஜாஹிர் ஹுசைன்

Rtn MPHF S ஜாகிர் உசேன் DME, BBA,MBA(HR)அவர்கள். 1968 ஆம் வருடம் பெங்களூருவில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை செகந்திராபாத்திலும் கல்லூரிப் படிப்பை கீழக்கரை பாலிடெக்னிக் காலேஜிலும் (ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்) படித்து முடித்தார். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் போன்ற நான்கு மொழிகளும் நன்கு பேசத் தெரிந்தவர். ஆரம்ப காலத்தில் சென்னை சிம்சன்&கோ லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின்னர், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் பணி புரிந்தார். அந்தத் துறையின் துணை முதல்வர், பதவி வரை வகித்தவர். மத்திய அரசின் 'நேரு யுவகேந்திரா' என்ற கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டு அமைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல இளைஞர்களின் மேம்பாட்டிற்கு காரணமாக இருந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 25 மாநிலத்தில் இருந்து வந்து, 10 நாட்கள் தங்கியிருந்து, தமிழக கலாச்சார பயிற்சியினை பெறுவதற்கு காரணமாக இருந்தார். Everwin Enterprises India Pvt Ltd என்ற விவசாய தொழில் சார்ந்த நிறுவனத்தை துவங்க இருக்கிறார். இவருடைய மனைவி அனிதா பேகம் (M.A., M. Ed) பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். இவருடைய மகள் ரிஸ்வானா பேகம் திருமணமாகி கூடலூரில் வசிக்கிறார். இவருடைய மகன் ஹாரூன் ரஷீத், ஒரு பொறியியல் பட்டதாரி. . 2008 ஆம் வருடம் ரோட்டரி சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2012ஆம் வருடம் தங்கமகன் ஆளுநராக இருந்த பொழுது விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வருடம் சிறந்த சுப்ரீம் தலைவர் என்ற விருதினைப் பெற்றார். தலைவரான பிறகு அனைத்து வருடங்களும் மாவட்டத்தின் பல பதவிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர் 2020-2021 வருடத்தின் District Joint Secretary Rtn MPHF S Zahir Hussain இவர் *விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் தலைவர். விருதுநகர் மாவட்ட சதுரங்க கழகத்தின் வட்டார இணைச் செயலாளராக உள்ளார்* இவரை தொடர்பு கொள்ள / செல்: 81909 48888

S.ஹரி பாஸ்கரன்

S Hari baskaran D.T.Tech 1977 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தேவனுர்புதூரில் பிறந்தார் பள்ளிபடிப்பை அருப்புகோட்டை, ராமசாமி நகர் காந்தி வித்யாலயம் பள்ளியிலும், டிப்ளமோ படிப்பை சங்கரன் கோவில் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் யிலும்படித்தார் பின் பணிநிமித்தம் ஈரோடு வெப்படை யில் PKPN நூற்பாலையில் பணிபரிந்தார் பின் கோவை மற்றும் திருப்பூர் பகுதில் garments factory யில் பணிபுரிந்தார்.பள்ளி பருவத்தில் இருந்தே விளையாட்டில் அதிக இடுபாடு உள்ளவர் பள்ளி பருவத்தில் தடகள வீரரகவும்.கல்லூரி மற்றும் பணிபுரியும் காலகட்டத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பாயிற்சி பெற்று வந்தார் உடற்கட்டுமான துறை மீது உள்ள் அதீத ஈடுபாடு காரணமாக 2004 ஆண்டு Mr.Thunder gym என்ற உடற்பயிற்சி கூடம் ஆரம்பித்து உடற்கட்டுமான போட்டிகள், பளுதூக்கும் போட்டிகள் பவர்லிப்டிங் போட்டிகளில் தனது மாணவர்களை வெற்றி பெற செய்துள்ளார்.2012 ஆண்டு தண்டர் பாகஸிங் கேம்பஸ் மற்றும் தண்டர் ஸ்குல் ஆப் சிலம்பம் ,தண்டர் டான்ஸ் அகடமி,அகியவை ஆரம்பித்து மாணவர்களுக்கு பாக்ஸிங் சிலம்பம் நடனம் கற்று தந்து வருகிறார். சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் வீரமிகு பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை என்ற அமைப்பை உறுவாக்கி மரம் நடுதல் சுற்றுபுறங்களை தூய்மை செய்தல் மருத்துவமுகாம் நடத்துதல் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி போன்றவை செய்து வருகிறார்.இளைஞர்களுக்கு காவல் இராணுவம் போன்ற துறைகளுக்கு பயிற்ச்சி அளித்து வெற்றி பெற செய்துள்ளார்.2018 ஆண்டு முதல் விருதுநகர் மாவட்ட சிலம்பாட்டகழக செயலாளராக உள்ளார். 2021ஆண்டு Thunder social club மற்றும் Rotare club of viruthunahar Thunder என்ற அமைப்பை உறுவாக்க உள்ளார் இவறை தொடர்பு கொள்ள 934513870

A.பூபால கணபதி

Rtn. A.பூபால கணபதி 1978 ,ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளத்தில் பிறந்தார் பள்ளி படிப்பை திண்டிக்கல மாவட்டம் சின்னாளபட்டியிலும்,இளங்கலை படிப்பை காந்திகிராம் பல்கலைகழகத்திலும் முதுகலை படிப்பை மதரை வக்ஃப் வாரிய கல்லூரியிலும் முடித்தார் , தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி,மலையாளம், சரளமாக பேச தெரிந்தவர்,2006ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை துபாய் " il NOOR" வங்கியில் -AGENCY MANAGER ஆக பணிபுரிந்தவர் தற்போது விருதுநகர்ல் International collection agency நடத்தி வருகிறார் இவரது மனைவி பிரேமலதா MA.BEd ஆசிரியராக பணி புரிகிறார் மகள்கள் ருவந்திகா,சிஜிதா,இருவரும் KVS நூற்றாண்டு பள்ளியில் படிக்கின்றனர்.

Formation of Association / Federation....

Tamil Nadu Silambattam Association was formed in the year 1980 with Founder President Iyya P.K.Muthuramalingam and Founder General Secretary Mr. M.Amanullah M.A., B.L., to propagate and popularize the Silambam as game with well defined Rules and Regulations as designed by it all over India by conducting tournaments...

Board

Vice President

Dr.P.K.Arunesh.M.Sc.M.Phil.Ph.D

Muthu Ramalinga Kumar

G.Karuppa Samy

Board

Join Secretary

G.Nagendran

T.Prabhakaran

Thanga Pandi

P.Venkateswaran

T.Anand Raj

P.P.Madasamy

Board

Dept Secretary

L.Ranjith Kumar

Selva Kani

P.Bala Murugan

Kannan

S.Muthu Krishnan

Jeyaram

Board

Tournament Directors

Dr.K.Selvaraj

Mohan

M.Ranjeev Gandhi

Board

REFREES

K.Prabhakaran

L.Ranjith Kumar

B.Palani

Vijaya Kumar

A.Prabhu

Vignesh Pandi

Nithya Sarath Kumar

Vignesh Kumar

Karthi Keyan

Arun Kumar

Poo Mari

MISSION

Our mission is to offer you the very best in contemporary Silambam coaching, both as an art form as well as competitive sport. Backed by our strong commitment, professionalism, enthusiasm and love for the game, and given our personal care and attention to detail, we aim to exceed your expectations every minute you are with us.

Silambam

Origin

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக்கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.[1] இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.[2],


வரலாறு
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள்சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.


ஆய்வுகள்
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.


சொல் பிறப்பு
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி,மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.


இலக்கியக் குறிப்புகள்
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' ன்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை "கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும் கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே; சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள் தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை" என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்


சிலம்பின் உட்கூறுகள்
மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம்.
மெய்ப்பாடம்
மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம்.
உடற்கட்டுப்பாடம்
குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்.
மூச்சுப்பாடம்
மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது.
குத்துவரிசை
முதன்மைக் கட்டுரை: குத்துவரிசை சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு,குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.
தட்டுவரிசை
ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர் தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.
பிடிவரிசை
எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது,யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.
அடிவரிசை
முதன்மைக் கட்டுரை: அடிவரிசை ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.[5] சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன.
சிலம்பத்தடி
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன துடுக்காண்டம் , குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம் போர்ச் சிலம்பம், பனையேறி மல்லு, கதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியனவாகும்.
சிலம்பாட்டச் சுற்று முறைகள்
சிலம்பாட்ட அடிமுறைகள்
சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை,கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும். ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது, இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது என இரு முறைகளும் இதில் உண்டு.
ஆயுதப் பிரிவுகள்
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.[6]
சிலம்பாட்ட அடிமுறைகள்
சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை,கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும். ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது, இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது என இரு முறைகளும் இதில் உண்டு.
ஆயுதப் பிரிவுகள்
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.
கராத்தேவும் சிலம்பமும்
கராத்தே என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கரம் என்பது 'கை' எனப் பொருள்படும் கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ.இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர்மன், போதி தர்மன் புத்த துறவிகளுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுத்தார் எனக் கூறுவர்.[3]] கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' (kata)என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசை காரணமாகச் சொல்லப்படுகிறது.[10] கதம்பவரிசை மற்றும் கடா இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும்.
சிலம்பப் போட்டி
தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இது தற்காப்புக் கலை.
சிலம்பம் கலை பயிற்றுவித்தல்
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.
பயன்கள்
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறுஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
உசாத்துணைகள்
டாக்டர் ஜே. டேவிட் டேனியல் ராஜ், சிலம்பம் - அடிமிறைகளும் வரலாறும், காரைக்குடி அழகப்பர் கல்லூரி வெளியீடு, 1971
ஞா. தேவநேயப் பாவாணர், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1966
டாக்டர் இரா. நாகசாமி, கல்வெட்டுக் காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியீடு, ஏபரல் 1974
டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரை.
சேலம் சிலம்ப ஆசான் திரு. முருகேசன் அவர்களுடன் நேரடியாக உரையாடிப் பெற்ற செய்திகள்.
சென்னை சிலம்ப ஆசான் திரு. முத்தியால் அவர்களுடன் பெற்ற செய்திகள்.

Gallery

What we've done

  • All
  • Camp
  • State Level
  • State Level-2018

Camp

Camp

Camp

Camp

Camp

Camp

State Level

State Level

State Level

State Level

State Level

State Level

State Level

State Level

State Level-2018

State Level-2018

Team List

Near Team List

# TEAM NAME COACH NAME ADDRESS MOBILE
1 Thunder school of silambam Hari baskaran 62/1 annaisivakami puram,viruthunagar 9345138701
2 Virudhai silambam acadamy M.Saravanan 1/659/1 ,Gandhi Nagar, Rosalpatty,virudhunagar 8428055894
3 Vijayan Academy of martial arts B.Aarish sree kumar 9,sankaran kinatru street, Virudhunagar 9047215403
4 Vignesh School of Silambam vignesh VNR 7598457864
5 Perunthalaivar kamarajar silamba kulu P.P.Madasamy 11,krishnankovil north street, moohavoor,rajapalayam tk, Virudhunagar 9344216935
6 NETHAJI SILAMBAM ACADAMY P.Venkateshwaran 9/12 mettu street Mele varisai Srivilliputhur 9487269360
7 VKS Academy P. Balamurugan 6/765 meenatchi colony, 5th street Sivakasi 9486314472
8 Virudhai ragu silampatam scholl G.bala murugan 105,municipal colony,pullalakkottai road,virdhunagar 7708536016
9 Dr.Apj.Abdulkalam Silambam Academy V.Jayaraman 124,/N.No-71 metunaidu st, Sriviliputhur,626125 8870725040
10 VKS ACADEMAY P.BALAMURUGAN 6/765,Meenatchi colony palliative,sivakasi,sivakasi east,virudhunagar 626189 9486314472
11 Pancha boothasilambam academy Anandraj.T 35,MDR Nagar North 3rd Street,chockalingapuram,Aruppukottai 626101 8220879516
12 Tamilan vilayattu mandram R. Selvam 467, muthumariamman colony, Thiruthangal 9944872219
13 Suriya Silamba Koodam Thanga Pandi Sattur 9629163958
14 Dks silambam academy Prabu 1/533, kaliyamman kovil theru, meenampatti, anuppankulam,virudhunagar, 9043797307
15 Ramabanam silamba kalai kudam A.Kannan 1/15 north street,sithamanaicken patti,sivakasi tk, viruthunagar dt 7639715520
16 Nethaji silambatta kulu Muthuraj 333, Sannathistreet, Thiruvannamalai, Srivilliputhur 9345672106
17 Kumaran silambam school Chellaiah 3/358, Middlestreet, Anuppankulam, Sivakasi. 9994573753

Contact

Contact Us

Location:

#6,Lakshmi Complex,
Uzhavar Sandhai Opposite,
Virudhunagar-626001,TN

Call:

+91 93451 38701